வலி
வார்த்தைகள் ஊமையான நாட்கள்
அவன் நினைவில்லாமல் நானில்லை
இருந்தும் அவன் நினைவில் நானில்லை
கடந்து விட்டது நாட்கள் என்பதால் கலங்கவில்லை
ஏக்கத்தில் எதிர்நோக்கி காத்து நிற்கிறேன்
உன் இரக்கத்தைப் பெறவல்ல
உன் இதயத்தில் ஒரு முறையாவது இடம்பெற
இதுதான் ஒருதலை காதலோ
காயங்களை ஆறவிடாமல் வாட்டுகிறதே…