ஏற்றம் பெற முடியுமா
தடாகத்தில் வாழும்
தாமரையும், தவளையும்
தண்ணீருக்கு மேலே
தலை காட்டி மகிழ்ந்தாலும்
தராதரம் பார்ப்பதில்லை
தாமரை மலரின் தேன்
தவளைக்குக் கிடைக்காமல்
வெளியிலிருந்து பறந்து வரும்
வண்டு அத்தேனை
உண்டு செல்வதுபோல்
வெவ்வேறு கட்சி மக்கள்
ஒரே இடத்தில்
ஒன்றாக வாழ்ந்தாலும்
ஆளும் கட்சி மக்களுக்கு மட்டும்
அரசின் பலன்கள் கிடைப்பது
ஏற்புடையதா ?
ஏல்லோருக்கும் பொதுவானது
எல்லா உரிமைகளும்
என்பதை அறியாதவர்கள்—மீண்டும்
ஏற்றம் பெற முடியுமா?