சீற்றத்தைக் காட்டுகிறதோ

அன்னையைப் போல
அரவணைத்துக் காக்கும்
புண்ணிய பூமியை வெட்டி
பள்ளம் தோண்டி பணம்
பார்க்கும் கள்வர்களாலும்

கழிவுகளையும், குப்பைகளையும்
கொட்டி மாசு படுத்துவதும்,
சாயக்கழிவுகளை ஆற்றில் விட்டு
சாக்கடையாக்குவதும்
சம்பிரதாயமாகிப் போனாலும்

பழிவாங்க எண்ணாத
பூமித் தாய் பொறுத்துக் கொண்டு
வாழும் உயிர்களைக் காக்க
விளை பொருளையும், செல்வத்தையும்
வாரி வழங்கத் தவறியதில்லை

மறவாதே ,முடிவில் புவியின்
மடியில் அடங்க நேரும்,
இயற்கையும் எழுந்து
திருந்த வழி காட்டுவதுபோல்
சீற்றத்தைக் காட்டுகிறதோ !

எழுதியவர் : கோ. கணபதி. (20-Feb-21, 2:44 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 53

மேலே