நம் தேசம்
அகிம்சை போதித்தவனுக்கு
நெஞ்சில் துப்பாக்கி
தோட்டாவை பதக்கமாக தந்த
நாடு இது!
அமைதி போராட்டத்தில்
அடிமையாய் அடிவாங்கி
பெற்ற சுதந்திரத்தை
பாலியல் வான்கொடுமையில் பார்க்கும்
நாடு இது!
ஜாதி, ஜாதி என
சாதி சனத்தை வேற்றுமை படுத்தி
மனித நேயத்தில் ஒற்றுமைகண்ட
நாடு இது!
இழந்த பல வீராங்கனைகளை
இன்னமும் கொண்டாடி மகிழும்
நாடு இது!
ஒவ்வொரு முறை தோற்றாலும்
பல வெற்றி சூத்திரங்களை
கற்று தரும் இளைஞர்கள் கொண்ட
நாடு இது!
நாடோடியாய் வந்தவனை
நல்லெணத்தோடு கட்டியணைக்கும்
நாடு இது!
சிந்தித்து பார்த்தால்
அருமை புரியும்
வாழ்ந்து பார்த்தால்
வறுமை புரியும்
நாடு இது!