The Crime 2

இருபது நிமிடங்களுக்கு பிறகு..

விநாயக் சென்ற கார் உள்ளே நுழைந்தது. வாசலில் பதட்டமாக நின்று கொண்டிருந்தான் கந்தசாமி.

“விநாயக் ஏன் இவ்வளவு நேரம்.?”

“ஏன் என்ன ஆச்சு.?”

“நம்ம அய்யாவ அடிச்சி மயக்கமாக்கி நிரஞ்சனா அம்மாவோட கார்ல தப்பிச்சி ஓடிட்டான் ஒருத்தன்.”

“அய்யா எங்க.? யார் அவன்.?”

“அய்யா மேல மயக்கமா கிடக்காரு. அவன் யார்ன்னு தெரில.” இருவரும் மேலே சென்று பார்த்தார்கள். தான் வரும் முன் இங்கு பெரிய போராட்டமே நடந்தது என்பது விநாயக்கிற்கு புரிந்தது.

“கந்தசாமி, அய்யாவ தூக்கு. அவர் இப்போதைக்கு எந்திக்க மாட்டார் போல இருக்கு பெட்ல படுக்க வச்சிடுவோம். காலைல எந்திக்கட்டும். உன்னையும் அய்யாவையும் அடிச்சவனால எப்படி உள்ள வர முடிஞ்சது.?”

“அதான் எனக்கும் புரியல.”

“லேசா பட்டாலே மணி அடிக்கிற கரெண்டு கம்பி இருக்கு வாசல்ல துப்பாக்கியோட வாட்ச்மேன் இருக்கான். இருந்தும் எப்படி உள்ள வர முடிஞ்சது.?”

“எனக்கு என்னமோ நிரஞ்சனா மேல தான் சந்தேகமா இருக்கு விநாயக்.”

“நீ சொல்றது உண்மையா கூட இருக்கலாம். அவ தான் அவனை உள்ள கொண்டு வந்திருப்பா.” என்றபடி சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டான்.

“ஆமா. இல்லன்னா ரெண்டு பேரும் சேர்ந்து கார்ல போவாங்களா.?”

“ம்ம்ம்.. அய்யா முழிக்கட்டும் காலைல பார்த்துக்கலாம்.”

மறுநாள் காலையில்..

“பாஸ் சிங்கத்தோட குகைலையே நுழைஞ்சி தப்பிச்சி வந்திருக்கிங்க. இந்தாங்க சூடா டீ சாப்பிடுங்க. என்றவாறே ஜெவுக்கும் பயந்து நடுங்கிக் கொண்டிருந்த நிரஞ்சனாவுக்கும் தேநீர் கொடுத்த கிருஷ் தானும் ஒன்றை எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தான்.

“கிருஷ் போட்டோலாம் நல்லா எடுத்தியா.?”

“சூப்பரா வந்திருக்கு பாஸ். அதுவும் நிரஞ்சனா உதட்டுல பச்சக்குன்னு கிஸ் கொடுத்தீங்க பாருங்க அத அப்படியே எடுத்திட்டேன்.”

“Good, அந்த போட்டோவெல்லாம் இந்த செல்லுக்கு ஏத்தி விடு. நிரஞ்சனா இது உன்னோட போன் தானே.”

“ஆமாம் எப்போ எடுத்தீங்க.?”

“நேத்தே எடுத்துட்டேன். நீ இப்போ என்ன பண்ற உன்னோட போன்ல செட்டிங்க்ஸ் போய் உன்னோட fingerprint lockக்க எடுத்து நார்மலுக்கு கொண்டுவா.” என்றான். நிரஞ்சனாவும் அவ்வாறே செய்தாள்.

“கிருஷ் கேட்ச் திஸ்.. நிரஞ்சனவோட செல்ல இருக்குற போட்டோஸ் பைல்ஸ் எல்லாம் செக்அப் பண்ணிடு. நேத்து நீ எடுத்த போட்டோ ஒன்னு விடாம உன்னோட செல்லுல ஏத்திக் கொண்டுவா.”

“பாஸ் இதெல்லாம் எதுக்கு.?”

“சொல்றேன் மொதல்ல கொண்டு வா.”

கிருஷ் பரபரவென லோப்டோப்பை ஆன் செய்து பதினைந்து நிமிடத்தில் புகைப்படங்களை மாற்றிக் கொண்டு வந்தான். வாங்கிப் பார்த்த ஜெ புன்னகையுடன் நிரஞ்சனாவை நெருங்கினான்.

“நிரஞ்சனா இதைப்பாரு.” என்றபடியே செல்போனை நீட்ட, வாங்கிப் பார்த்த நிரஞ்சனா முகம் சிவந்தாள்.

“இப்போ நான் என்ன பண்ண போறேன்னா இதையெல்லாம் உபேந்திராவோட வாட்ஸ்அப் நம்பர்க்கு அனுப்ப போறேன். இதையெல்லாம் பார்த்த உபேந்திரா நான் உன்னோட ரகசிய காதலன்ன்னு நம்பிடுவான்.”

“இதெல்லாம் என்ன கட்டாயப்படுத்தி தானே எடுத்தீங்க.”

“எஸ்.. ஆனா அது உபேந்திராவுக்கு தெரியாதே. ஓகே நான் அவனுக்கு அனுப்பிட்டேன் இதெல்லாம் பார்த்தா நேத்து அவன் வர்றதுக்கு கொஞ்சம் முன்ன எடுத்த படம்ன்னு அவன் நம்பனும்.” என்று ஜெ அவளை மிரட்டியபடியே உபேந்திராவின் எண்ணுக்குக்கு புகைப்படங்களை அனுப்பினான்.

“இதையெல்லாம் பார்த்தா உபேந்திரா என்னைக் கொன்னுடுவான்.”

“ஏற்கனவே அவனுக்கு உன் மேல நிறைய சந்தேகம். இதையெல்லாம் பார்த்தா அவன் கண்டிப்பா உன்னைக் கொன்னுடுவான். so, நீ எங்களுக்கு உதவி பண்ணா நான் உனக்கு உதவி செய்வேன்.”

“நான் என்ன செய்யனும்.? என்றாள் நிரஞ்சனா வேறு வழி இல்லாமல்.

“நாங்க சொல்றபடி செய்யனும். அப்படி செய்ஞ்சா மட்டும்தான் நாங்க உன்ன பாதுகாப்போம். இல்லன்னா நீ உபேந்திரா கிட்ட மாட்டி சாக வேண்டியது தான்.”

“சரி நீங்க சொல்றபடி செய்றேன்.”

அதேநேரம் பங்களாவில்...

தன்னுடைய வாட்ஸ்அப்பில் வந்த புகைப்படங்களைப் பார்த்துக் கொதித்துக் கொண்டிருந்தான் உபேந்திரா.

“பொட்ட நாய்.. உன்ன சும்மா விட மாட்டேன்டி.”

“என்னாச்சுங்க அய்யா.” என்றான் விநாயக்.

“அவ துரோகி ஆகிட்டா, அவளைக் உயிரோட விடக்கூடாது விநாயக்.” என்று கொதித்த உபேந்திராவின் கையில் இருந்த செல்லை வாங்கி புகைப்படங்களைப் பார்த்தான்.

“இதெல்லாம் நேத்து நைட்டு எடுத்த போட்டோக்கள்.”

“ஆமாம் நேத்து எடுத்தது தான்.” கந்தசாமியும், ஒப்புக் கொண்டான்.

“அவளை விடக் கூடாது விநாயக். எங்க இருந்தாலும் அவளை தேடிப் பிடிச்சி கொல்லனும்.” அப்போது தொலைபேசி ஒலிக்க எடுத்துக் காதில் வைத்துக் கொண்டான் உபேந்திரா.

“ஹலோ.. யாரு..”

“ஹலோ உபேந்திரா, நான் யாருன்குறது முக்கியமில்ல, உன்னோட நிரஞ்சனாவின் ரகசிய காதலனோட எதிரி. நான் தான் அந்த போட்டோவ உனக்கு அனுப்பினேன். ஒரு முக்கியமான விசயமும் சொல்றேன். உன்னோட காதலி இப்போ அவளோட ரகசிய காதலனோட இருக்குற இடம் எனக்கு தெரியும்.”

“அது மட்டும் உண்மையா இருந்தா.. சரி சொல்லு உனக்கு எவ்வளவு பணம் வேணும்.?"

“எனக்கு பணம் வேண்டாம் பிரதர்.. எதிரியோட எதிரி எனக்கு நண்பன் கான்செப்ட் தான். அதனால நான் உனக்கு இதை சொல்றேன். அவ இப்போ தன்னோட புது காதலனோட ஹோட்டல் நியான்ல 97வது ரூம்ல தங்கிருக்கா.. நீங்க போனா அவளைப் பிடிச்சிடலாம். வச்சிடவா.” என்றபடியே போனை வைத்தான் கிருஷ்.

“good” என்றபடியே தம்ப்ஸ்அப் காட்டினான் ஜெ.

“முக்கியமான தகவலா அய்யா.” கேட்டான் விநாயக்.

“ஆமாம், நிரஞ்சனா இப்போ எங்க இருக்கான்னு தகவல் கிடைச்சிருக்கு.”

“யாரு தகவல் சொன்னது.?”

“அந்த சிறுக்கியோட புதுக் காதலனோட எதிரியாம்.”

“அவன் சொன்ன தகவல் உண்மைன்னு எப்படி நம்புறது.?”

“அதையும் போய் பார்த்திடுவோம். நீயும் கந்தசாமியும் ஹோட்டல் நியான் போங்க. அங்க அவங்க இருந்தா அங்கயே அவளை சுட்டுக் கொன்னுடுங்க.”

“சரி..” விநாயக்கும் கந்தசாமியும் கிளம்பினர்.

அதே நேரம் ஜெவின் வீட்டில்..

“இப்போ நாம எங்க போறோம்.?” என்றாள் நிரஞ்சனா.

“ஹோட்டல் நியானுக்கு.” அவளைக் காரில் ஏற்றியபடியே பதில் சொன்னான் கிருஷ்.

ஹோட்டல் நியான்..
கார் பார்கிங்கில் காரை நிறுத்தியபடி இறங்கினர் விநாயக்கும் கந்தசாமியும்.

“இந்தா இதை வச்சிக்க.” என்றபடியே விநாயக் கந்தசாமியிடம் துப்பாக்கியை நீட்டினான்.

“அவ எங்க இருக்கா.? கந்தசாமி கேட்டான்.

“ரூம் நம்பர் 97-ல,”

“நாம அங்க வருவோம்ன்னு நிரஞ்சனாவுக்கு தெரியுமா.?”

“இருக்காது நாம இங்க வர்றது நமக்கு போன் செஞ்சவனுக்கு கூட இப்போதைக்கு அது தெரியாது.” சொல்லியபடியே 97-ம் அறைக்கு செல்ல வேண்டிய லிப்ட் பொத்தானை அமுக்கினான் விநாயக். அதே நேரம் அந்த இருவரையும் இரண்டு ஜோடிக் கண்கள் கண்காணித்துக் கொண்டிருந்தது.

லிப்ட் கதவு திறந்தது. இருவரும் நடந்து 97-ம் எண்ணுடைய அறைக்கு சத்தமில்லாமல் நடந்தனர். எல்லா அறைக் கதவுகளும் பூட்டி நிசப்தமாய் இருக்க, இருவரும் 97-ம் அறையைத் தட்டினர். அறையில் இருந்து கதவு திறப்பதற்க்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இல்லை.

“என்ன உள்ள இருந்து எந்த சத்தமும் வரல.” என்றான் கந்தசாமி.

“உள்ள யாரும் இல்லன்னு நெனைக்கிறேன். உன்னோட மாஸ்டர் கீ வச்சி கதவத் திற.” கந்தசாமி மாஸ்டர் கீ உதவியுடன் கதவைத் திறக்க முயன்றான். சில நிமிடங்களுக்கு பிறகு “க்ளிக்" சத்தத்துடன் கதவு திறந்து. அவர்கள் இருவரும் உள்ளே நுழைந்தார்கள். அவர்கள் உள்ளே நுழைவதை கீழே பார்த்த அதே கண்கள் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தது.

“அவங்க ரெண்டுபேரும் இங்கதான் தங்கிருந்திருக்காங்க.” இருவரும் அறையை அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்தார்கள். கீழே கசங்கிக் கிடந்த ஒரு காகிகத்தை எடுத்து பார்த்தான் கந்தசாமி.

“விநாயக் இங்கபாரு. நிரஞ்சனவோட காதலன் ஒரு குறிப்பு எழுதி வச்சிட்டு போயிருக்கான். அவ அதை படிச்சிட்டு கீழே கசக்கி போட்டுட்டு போயிருக்கா.”

“என்ன எழுதிருக்கு அதில.?”

“வாசிக்கிறேன் கேளு, "டியர் நிரஞ்சனா அவசரமாய் ஒரு வேலை வந்து விட்டது. அதனால் சொல்லிக் கொள்ளாமல் புறப்படுகிறேன். அடுத்து நாம் எங்கே சந்திப்பது என்று பிறகு உனக்கு போனில் சொல்கிறேன். இப்படிக்கு விஜய்.”

அதே நேரம்..
இவ்வளவு நிமிடங்களாய் அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருந்த அந்த விழிகள் செல்போனை எடுத்து அவசரமாய் டையல் செய்து பேசியது.

“ஹலோ ஜெ, அவங்க உள்ள தான் இருக்காங்க.”

“கந்தசாமி நிரஞ்சனா இன்னும் இங்கதான் தங்கிருக்கா போல இருக்கு. அவ எப்படியும் இங்கதான் மறுபடி வரணும். நீ ரூம்லயே இரு. நான் கீழே வாசல்ல இருக்கேன். அவ வந்ததும் நான் உனக்கு சிக்னல் தர்றேன் உடனே கீழே வந்துரு. இங்க இருந்து அவ டெட்பாடி தான் மறுபடி வெளிய போகணும்.” சொல்லிவிட்டு வாசலுக்கு நடந்தான்.

விநாயக் வாசலை அடைந்த அதே நொடி கிருஷ்சும் நிரஞ்சனாவும் வந்த கார் வெளியே நிற்பதற்கும் சரியாக இருந்தது. விநாயக் கந்தசாமிக்கு சிக்னல் தர, அவன் அவசரமாய் கீழே ஓட ஆரம்பித்தான்.

அதே நேரம்..

நிரஞ்சனா உங்களுக்கு ரூம் நம்பர் 97-ல புக் பண்ணிருக்கு. நீங்க அங்க தங்கிக்கலாம். என்றான் கிருஷ்.

“எனக்கு பயமா இருக்கு.”

“பயப்படாதீங்க. நீங்க இங்க தங்கிருக்குறது உபேந்திராவுக்கும் அவனோட ஆட்களுக்கும் தெரியாது. அதனால நீங்க தாரளாமா தங்கிக்கலாம்.” என்றபடி சாவியை நீட்ட. அதே நேரம் விநாயக் நிரஞ்சனாவுக்கு குறி வைத்தான்.

கிருஷ்ஷின் செல்போன் அலறியது.

“ஹலோ..”

“கிருஷ் நிரஞ்சனாவ கூட்டிட்டு உடனே தப்பிச்சிடுங்க. உபேந்திராவோட ஆட்கள் அங்க துப்பாக்கியும் கையுமா இருக்காங்க.” கிருஷ் போனில் வந்த தகவலை செவிமடுத்துக் கொண்டிருக்கும் அதே வினாடி துப்பாக்கியோடு ஒருவன் நிரஞ்சனாவிற்கு குறி வைத்துக் கொண்டிருப்பதைக் கவனித்து விட்டான்.

“நிரஞ்சனா வேகமா வண்டில ஏறு..” நிரஞ்சனா புரியாமல் கிருஷ்ஷை பார்த்துக் கொண்டிருக்க, கிருஷ் நிரஞ்சனாவின் கையைப் பிடித்து இழுத்து கார்க்குள் திணித்து கதவை அறைந்தான். நிரஞ்சனா கார்க்குள் இழுக்கப்பட்டதைக் கண்ட விநாயக் ட்ரிக்கரை அழுத்த தோட்டா சீறிக் கொண்டு காரைத் தாக்கியது.

கிருஷ் முழு வேகத்தில் ஆக்ஸ்லேன்டரை மிதித்தான். கார் விருட்டென்று பறந்தது.

- தொடரும்

எழுதியவர் : அருள் ஜெ (24-Feb-21, 7:25 am)
சேர்த்தது : அருள் ஜெ
பார்வை : 86

மேலே