கல்லைக் காய்க்கின்ற மரம்
பாறையை பாறையின் மேல்
படுக்க வைத்து சென்றது யாரோ?
குண்டான கரும்பாறை எந்நாளும்
அழுகாமல் மக்காமல் இருப்பது ஏனோ?
பெருங்காற்று மழைக்கும் அஞ்சாமலும்
கரையாமல் சிதையாமல் இருப்பது எப்படி?
கல்லெல்லாம் மண்ணாக மாறாமலும்
மண்ணெல்லாம் கல்லாக மாறாதது ஏனோ?
பல வகை மரங்கள் புவியில் இருப்பினும்
கல்லைக் காய்க்கின்ற மரம் இல்லை ஏனோ?
கருங்கல்லின் உறுதியைப் போல்
மனித உடல் படைக்கப்படாதது ஏனோ?
தேங்கும் தண்ணீரை பாறை தன்னுள் சேமிக்காமல்
உழைக்காத மாந்தர் போல் ஆனது ஏனோ?
----- நன்னாடன்.