கடமை - வஞ்சித்தாழிசை
உழைப்பவர் வியர்வையில்
பிழைத்திட வரும்நரி
நுழைவதைத் தடுத்திட
விழைதலும் கடமையே!
**
வெறுத்திடும் வகையினில்
அறுத்திடத் துணிபவர்
மறுத்திடும் உரிமையை
பெறுவதும் கடமையே!
**
அடிமையைப் போலெமை
மிடிமையி லாழ்த்திடும்
கொடியவர் அழித்தெழும்
விடியலும் கடமையே!
**
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
