பூண்டோடு நல்லெண்ணெய் விட்டு
சோற்றை வடித்து நேரான பசு நெய்க்கலந்து
மிளகின் தூளைத் தூவி தூள் உப்பிட்டு
அரைத்த பச்சை மிளகாய் சாற்றைத் தெளித்து
இஞ்சியோடு உப்பு புதினா தழைச் சேர்த்து அரைத்து
பூண்டோடு நல்லெண்ணெய் விட்டு தாளித்து
துவையலாக்கி அப்பலப்பூவும் அரிசி வற்றலும்
பொறித்து கத்திரிக்காயை விளக்கெண்ணெயில் வதக்கி வடகமிட்டு தணியாவோடு மிளகாய் தூளிட்டு
நீரிட்டு வேக வைத்து சுண்ட அனலிட்டு தளதளக்க
எடுத்து வைத்து உருளைக்கிழங்கை வட்ட வடிவில்
வெட்டியெடுத்து உப்பிட்டு நன்றாய் வேக வைத்து
தனியான காய்ந்த மிளகாய்த் தூளையும் தூவி
நெய்யில் கடுகை தாளித்து பொரியலில் கொட்டி
பசிக்கும் போது கலவைச் சோற்றோடு கலந்தே
உண்ணால் கடுஞ்சோர்வும் களைந்து போகுமே.
----- நன்னாடன்.