துணிந்தெழுடா தமிழா
துணிந்தெழுடா தமிழா நீயும்
துணிந்தெழுடா தமிழா
நமக்கும் நாளை விடியுமென்று
துணிந்தெழுடா தமிழா(2)
நீ தோல்வி கண்டு துவளாமல்
வாழ்வின் நெறிமுறை மாறாமல்
போராடும் மனம்கொண்டால் தோல்வியில்லை
துணிந்தெழுடா(2)
பதவி புகழ் பணம் எல்லாம்
வாழ்வில் என்றும் நிரந்தரமில்லை
உண்மை நேர்மை உழைப்பு
வாழ்வில் என்றும் தோற்பதில்லை
(நீ தோல்வி)
(துணிந்தெழுடா)