கண்ணான கண்மணியே

கண்ணான கண்மணியே
கலங்காம நீ உறங்கு
தாய் தந்த நமக்கில்லைன்னு
நினைக்காம நீ உறங்கு
உனக்குறவா(உனக்கா ) நானிருப்பேன்
உருகாம நீ உறங்கு
நமக்கும் நாளை நல்ல
விடியல் உண்டு நீ உறங்கு(2)

தாய்முகம் பார்க்கவில்ல
தந்தை பாசம் கேட்டதில்ல(2)
சோகம் கொண்டு தோள் சாய
சொந்தம்னு யாருமில்ல

வானவில்லும் நமக்குஉண்டு
வண்ணமது சொந்தமில்ல
சோகங்கள் எனக்குமுண்டு
சொல்லி அழ யாருமில்ல

யாருகிட்ட நான்
சொல்லி முடிக்க
நம்ம கதைய..
யாருகிட்ட நான்
சொல்லி முடிக்க
நம்ம கதைய..

கானல் நீர்போல
கண்ணிலே ஈரமில்ல(2)
மனதின் பாரமெல்லாம்
மலையின் எடைபோல

அழுகை நமக்கு உண்டு
ஆறுதல் ஏதுமில்லை
மனதின் ரணம் சொல்ல
வார்த்தை ஏதும் வரவில்ல
உன்னை நினைச்சு

பாட்டு படிச்சேன்
நம்ம கதைய...
உன்னை நினைச்சு
பாட்டு படிச்சேன்
நம்ம கதைய...

எழுதியவர் : Rudhran (6-Mar-21, 1:04 am)
சேர்த்தது : krishnan hari
Tanglish : kannaana kanmaniye
பார்வை : 122

மேலே