தன் பயன் மறந்து
தன் பயன் மறந்து
இருந்துமே இல்லாமல்
இருக்கிறதோ !
இல்லை இருந்தும்
தன் பயன் மறந்து
இருக்கிறதோ ?
ஆட்டுக்கல்லோ
அம்மிக்கல்லோ
வீட்டில் இருந்தும்
அசைவு சத்தங்கள்
இல்லாமல்தான் இருக்கின்றன
குதிரைகள் இருந்தும்
ஓட மறந்து
நிற்கின்றன
காளைகள் இருந்தும்
உழுவதற்கு மறந்து
நிற்கின்றன
பூனைகள் இருந்தும்
எலிகளுடன்
விளையாண்டு கொண்டிருக்கின்றன
குரங்குகள் இருந்தும்
மரமேற மறந்து
கையேந்தி கொண்டிருக்கின்றன
பறவைகள் இருந்தும்
பசுமைகள் மறைந்து
தங்க இடம் தேடி
அலைகின்றன
ஆடும் மாடும்
மேய மறந்து
கொடுத்ததை தின்று
பாலை கொடுத்து
கொண்டிருக்கின்றன
கழுதைகள் எல்லாம்
கத்த மறந்தும்,
பொதியை மறந்தும்
துணி மூட்டைகளை
மறந்தும் வெறும் வாயை
அசைபோட்டு நிற்கின்றன
நாயினங்கள் எல்லாம்
நடக்கும் பாதையை
காவல் காத்து
வயிற்று பசியால்
படுத்து கிடக்கின்றன
என்றோ எப்பொழுதோ
நம்மிடம் வந்த
இந்த உயிரனங்கள்
மனிதன் தன்னை
நிர்வகிக்கவே
இயந்திரம்
தேடும் போது
இவைகள்
என்ன செய்யும்?
எங்கே போகும்?
தன் பணிகள் செய்ய
முன்னோர் வாழ்ந்த
காட்டுக்கு போலாம்
என்றால் !
காடுகள் எல்லாம்
நாடுகளாய் ஆன பின்னால் !