உள்ளூர ரசிக்கும்
பிறப்பின் பயன்
சாதனை வடிவில்
துறப்பின் செயல்
பொறுப்பற்ற நிலையில்
அறத்தின் வடிவம்
அன்பின் செயல்
தரத்தின் உணர்வு
புடமிட்ட தங்கம்
வரத்தின் வெளிப்பாடு
உயர்ந்த எண்ணம்
புறத்தின் தோற்றம்
உள்ளத்தின் கிடக்கை
குறளின் தத்துவம்
குறித்திடும் மேம்பாடு
நிறத்தின் தோற்றம்
வண்ணக் கலை
திறமையின் ஊற்று
ஊக்கத்தின் உயர்வு
தூறலின் பண்பு
நல் மழையின்ஆரம்பம்
ஆற்றலின் பேச்சு
வெற்றியின் வெளிச்சம்
அவனவன் மூச்சில்
எழுச்சியின் கொணர்வு
சுரத்தின் சாரம்
ராகத்தின் அச்சாணி
மௌவுனத்தில் மனங்கள்
உள்ளூர ரசிக்கும்
ஒன்றிற்கு ஓன்று
தூதுவிடும் உண்மைகள்
உற்சாகம் உலவிட
உதவும் பதங்கள்