பிராண வாயு - கரியமில வாயு

ஒழுகிசை அகவல் ஓசை உடைய
நிலைமண்டில ஆசிரியப்பா

பிராண வாயுவே முதன்மை உயிராம்
புவியில் வாழும் எல்லா உயிர்க்கும்
எளிதிலே உறையும் தன்மை அதிகமாம்
புவியின் கவசம் இதுவே உணர்வாய்.

கரிய அமில வாயுவை மரமும்
நிறைய உண்ணுமே இரவில் தினமும்
எடையில் வலுமிகு வாயுவே அதுவாம்
காற்றில் கரியமும் நிறைந்தால் கெடுதலே.

இயந்திரம் இயங்கும் எண்ணெய் கழிவால்
கரியம் எங்குமே நிறைந்து உள்ளதாம்
இதனையே நீக்குதல் அரிதென ஆனதாம்
அனைவரும் முயலினும் அற்புதம் நிகழுமோ.

கரிய காற்றினின் இயல்பே அனலாம்
கடுமை மிகுந்த சூழலும் தோன்றுமாம்
கணக்கிலா துர்நிலை மாற்றமும் வருமாம்
மரங்கள் மூழ்கிட மழையும் பொழியுமே.

அறிவியல் இதற்கென மாற்றம் கண்டால்
மட்டுமே உலகில் ஏற்றம் தோன்றுமே
மதிக்கா இருக்கும் காலமும் யாவும்
பலபல பிணிகள் உயிரைக் கொல்லுமே.
-------- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (25-Mar-21, 6:54 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 76

மேலே