புறம்

கற்க கற்க கடவுளாகிறான் - கற்காவிடின்
கண்ணிருந்தும் குருடனாகிறான்.

நல்லதொரு அறசொற்களுக்கு செவி சாய்ப்பவன் செம்மை அடைகிறான் - செவி சாய்க்கவிடின்,
காது இருந்தும் செவிடனாகிறான்.

ஆக்சிஜனை சுவாசிக்கிறவன் வாழ்கிறான் - நற் சுவாசமற்றவன்
நாசி இருந்தும் சுவாசத்தை இழக்கிறான்.

பண்புள்ள சொற்களை உச்சரிப்பவன் மேன்மை அடைகிறான் - பண்பு இல்லையெனில்,
வாய் இருந்தும் ஊமையாகிறான்.

அறம் செய்ய செய்ய கரம் ஓங்குகிறது - அறம் இல்லையெனில்,
கரம் இருந்தும் செயலற்றதாகிறது.

நற் சிந்தனை செதுக்க செதுக்க சிலை வடிப்பான் - சிந்திக்காவிடின்
ஞானம் இருந்தும் கருங் கல்லாகிறான்.

எழுதியவர் : இரா. தெய்வானை (7-Apr-21, 5:12 pm)
சேர்த்தது : இரா தெய்வானை
Tanglish : puram
பார்வை : 58

மேலே