கைவிடப்பட்ட கணம்
நாம் நம்மைக்
கைவிட்ட கணம்
கண்ணாடியில் மோதிச்
சிதைந்த பட்டாம்பூச்சியின்
நிறத்தை ஒத்திருக்கிறது
எதைக் குறித்தும்
ப்ரக்ஞை இன்றிக் கமழ்கிறது
மலரொன்று
புன்முறுவலோடு தலையசைக்கிறாய்
விடைபெறுதலின் நேர்த்தியோடு
விடைபெறுதலின் கடைசிக் கனத்தோடு
எந்த வலியும் உணராமல்
உணர்த்தாமல்
விடைகொடுக்கிறேன்
குறுநகையோடு
யார் யாரைக் கைவிட்டதோ
கடைசியாக நீட்டிய கையைப்
பற்றிக் கொண்டிருந்திருக்கலாம்
நீ எனினும்