சாலை இளம்தென்றலே சந்திரோதயமே

ஓலைக் கவிஞனும் தீட்டாத ஓவியமே
சேலையில் சித்திரமாய் செந்தமிழாய் வந்தாயோ
மாலையும் ஏங்குது பார்

--சிந் இ வெ

ஓலைக் கவிஞனும் தீட்டாத ஓவியமே
சேலையில் சித்திரமாய் செந்தமிழாய் வந்தாயோ
மாலையும் ஏங்குது பார்உன் னழகினில்
சாலை இளம்தென்ற லே !

----ஓ வி இ வெ

சாலை இளம்தென்ற லேசந்தி ரோதயமே
ஓலைக் கவிஞனும் தீட்டாத ஓவியமே
சேலையில் வந்தாயோ செந்தமிழ்ச் சித்திரமே
மாலையும் ஏங்குது பார்உன் னழகினில்
சோலைக் குயில்பா டுது !

---ஒ வி பஃ வெ

எழுதியவர் : கவின் சாரலன் (19-Apr-21, 7:53 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 50

மேலே