ஏக்கத்துடன் நான்
என் இனியவளே
உன் அனுமதியின்றி
உன்னை உரிமையோடு
தழுவி செல்லும் தென்றல்..!!
உன் அனுமதியின்றி
உன்னை உரிமையோடு
தொட்டு தொட்டு
விளையாடும் பட்டாம்பூச்சி...!!
ஆனால்.... நானோ...
உரிமை இருந்தும்
உன்னை தொட்டு மகிழ
உன் அனுமதி வேண்டி
ஏக்கத்துடன் நிற்கிறேன்....!!
--கோவை சுபா