காதல் கிறுக்கன்

அடியே பெண்ணே எந்தன் காதலியே
அடியேன் உன்னழகில் மயங்கி வடித்த
காதல் கவிதை இதோ பார்க்கின்றேன்
உந்தன் தாமரைக் கைகளில். நீயோ
நிலைக் கண்ணாடி முன்னே நின்று
உந்தன் அழகை அங்கம் அங்கமாய்
ரசிக்கின்றாய்; கொஞ்சம் சொல்லேன் நான்
எழுதிய கவிதையில் நீஅழகா இல்லை
அந்த நிலைக் கண்ணாடியில் உன்பிம்பமா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (9-May-21, 5:17 pm)
Tanglish : kaadhal kirukan
பார்வை : 179

மேலே