ஆர்பரிக்கும் கடல்

ஆர்பரிக்கும் கடல்
அழகான உடலாய் அலை
ஆழமான கடல்;
ஆழ்மனம் போன்ற ரகசியம்
அதில் அடங்கிக் கிடக்கும்
ஆயிரம் ஆயிரம் புதையல்.
அடித்தே வீசும் புயல்;
ஆபத்தான கடல்,
ஆழி சூழ் உலகை
சுமப்பதே கடல்.

பருவங்களை தருவது கடல்,
பருக முடியாத கடல்.
விரைகடல் எழுப்பிய ஓசை
விரைந்து வந்தேதுள்ளுது ஆசை.

விதலை பெறத் துடிக்கும் அலைகள்
விடை தெரியாது தவிக்கும் இந்த அலைகள்.
விரட்டியே வந்து தொடும் அலைகள்
விரக்தியோடு திரும்பும் அலைகள்.
வெள்ளி ரதமாய் விரைந்தே பாயும் அலைகள்
வெளிவர முடியாது தவிப்பதைப்பாரு.

விளையாட்டாய் காலைவிட்டால்
விர் என்று இழுத்துச் செல்லும் அந்த அலைகள்.

நரைபூத்தது தலையில்,
நுரை பூத்தது அழகு கடலில்.

நடந்து செல்லும் இவள் கால்கள் நளினம்
அலைந்த திரியும்;
அலைகளின் ஆடலும் நளினம்.

உடலைபோத்தியது ஆடை,
கடலை போத்தியது அலை.
கட்டியணைக்கத் துடித்தது
தொடுவானில் பருதி.

ஆழ்கடல் ஓய்ந்தாலும்
அலை கடல்
உறங்குவது இல்லை.

நீல்கடல் நீண்டாலும்
நிலைகொள்வதில்லை.

படையாய் எடுத்த அலை,
இடையாய் இடித்த அலை,
உடையாய் போத்திய நுரை ,
குடையாய் பிடித்த மேகம்
குடமாய் கொட்டியது மேகம்.

வகுடு இழுத்த படகு
வழித்தே கடலில் போவது அழகு
இடித்த அலையில்,
தள்ளாடி இடம் மாறிப்போவது படகு.

துடிக்கும் மீன்கள்,
துள்ளும் கண்கள்,
தள்ளும் காற்று,
தடுமாறும் படகு.

இயற்கைச் சிற்பி செதுக்கிய செவ்வானம்,
இதமான தென்றல்
எழுந்தே பறந்த
இறைதேடும் பறவைகளின் ஓசை,
உதய சூயனின் ஏழுச்சி.

விழித்த நிலவு
விடைபெற்ற ஞாயிறு.

பழுத்த பொழுது,
பட்டேத் தெரித்தது
பொன்வானத்து கதிரு.

செவ்வந்திவானம்
செந்தூரம் பூசியது கடல்;
வலைவீசிய மீனவன்
வந்தே துள்ளிவிழுந்த மீன்கள்.

அலைகள் ஒலித்த ஓசை,
அடித்தே முழக்கமிடம் பாசை.
அயர்ந்து வந்து தூங்கிட
உயர்ந்து வந்த அலை,
ஓயாது ஓடிவந்து கடல் மண்ணைத் தழுவுவதும் அழகு.
பகலிலும் இரவிலும் பார்த்து ரசிப்பது அழகு.

நில வண்ண கடல்,
நீண்டு சென்ற நீர்பரப்பு,
சங்கமம் ஆகும் முக்கடல்,
சலனம் இல்லா மரணக்கடல்,
ஏழு கடலின் துவக்கம்,
இந்த பிரபஞ்சம் தந்த புவியின் அதிசயம்.

அ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (12-May-21, 5:42 pm)
Tanglish : aarparikkum kadal
பார்வை : 196

மேலே