எப்போது சொல்வாய்

இமைகளை திறந்து பேசி செல்வதை விட செவ்விதழ்களை விரித்து காதல் மொழி பேசி செல்!
மௌனகூண்டுக்குள் அடைபட்டு கிடக்கும் கிளியாய் இல்லாமல் காதல் மொழி பேசும் குயிலாய் எனக்குள் வந்து கூவி செல்!
ஊமை பாஷை பேசும் கரையாய் இல்லாமல் சத்தமிட்டு உரைக்கும் கடல் அலையாய் காதலை சொல்லடி!
சிப்பிக்குள் முத்து போல காதலை மனசுக்குள் மறைத்து வைக்காதே!
உன் இதய வாசல் திறந்து என் உயிரின் உயிரை காட்டிடு!

எழுதியவர் : சுதாவி (13-May-21, 1:41 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : eppothu solvaai
பார்வை : 168

மேலே