வருவானா சுக்ரீவன்
எந்த இராவணன்
அனுப்பி வைத்தான்
மாரீசன் எனும்
மாயமானை...
கொரானா
என்ற பெயரில்
குடும்பங்களை
பிரித்துவிட்டதே
இராம லஷ்மரை தனியாக
பிரித்ததுபோல....
எல்லா மருத்துவ
சடாயுக்களையும்
தகர்த்திவிட்டு
எடுத்துச் செல்கிறது
எந்த மானுக்கும்
ஆசைப்படாத சிசுக்களின்
உயிர்களையும்
சிவலோகத்திற்கு....
அசோக வனத்திற்கு
தூக்கிச் சென்றது போல
என்று வருவான்
மருந்தெனும் சுக்ரீவன்...
தன் வானரப்படைகளுடன்
எங்கள் தாய்களைகளையும்
சகோதரிகளையும்
பிள்ளைகளையும்
காத்திடவே...
மரணம் எனும்
இராவணனிடமிருந்து....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
