விண்ணைத்தாண்டி வருவாயா

இருள் விலகாத காலையில் எழுந்து வந்து
பொருள் புரியாத கவிதையை உதி்ர்த்துவிட்டு
மருள்விழியாள் மனைக்குள் மறைந்து விடுகிறாள்
தெருமுழுதும் ஒரு நூறு கால்கள் எதிரில்வந்து
திருமுகத்தின் தரிசனங் காண காத்திருப்பதை
ஒருமுகமாய் ரசித்தபடி கிடக்கிறது அக்கவிதை
வாசலில் கோலம்

எழுதியவர் : (9-Jun-21, 6:35 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 98

மேலே