கற்றுத்தா தமிழ்
முல்லைதோற்றிடும் முத்தெழில்நகை
மூன்றாம்பிறை எழில்நுதல்குழல்
முழுநிலவினின் வெண்ணெழில்முகம்
முற்றுப்பெறா தெனதுவரியை
முடித்துவைத்திட முன்வந்தனை
அன்பே
பார்க்கிறாய் சுற்றுச் சூழல் மறந்தேன்
கற்றுத் தாதமிழ் கவிதை முடிக்கவே !
----குறளடி வஞ்சிப்பா