பிழிந்து எடுத்த அழகுதான்

தான் தான் தான்
ஆசைதான்,
அது இன்ப வதைதான்;
அது ஒரு சுவைதான்,
அது விதைத்தது சுகம்தான்,

அது அது தான்;
என் இதயம் தாங்கிய
இன்ப வலிதான்;
புது புது ரசனைதான்;
புதைந்து கிடப்பது,
உன்மேல் ஆசைதான்.

படும் படும் வதைதான்,
படுத்துறங்க விடாது,
தவிக்க வைக்கும்
பெரும் வதைதான்.

பெறும் பெறும் சுகம்தான்;
உன்பேர் சொல்ல ஆசைதான்;
உன்னோடு உறவாட ஆசைதான்.

வரும் வரும் ஆசைதான்;
வாழ்நாள் முழுவதும்,
பாய்ந்து வரும் அலையாய்
உன் மடியில் சாந்துகிடக்க ஆசைதான்.

தொடும் தொடும் வெட்கம்தான்;
தொடாத பரிசம்தான்;
தொடாவிட்டால் துக்கம் தான்
தொடரும் தொடரும் கதைதான்,

தொட்டால் போகும் இந்த வதைதான்;
போதும் போதும் இந்த பிரிவுதான்;
போத்தி படுத்தால் வரும்,
நினைவுதான்.

தரும் தரும் இன்பம் தான்;
நீ தந்துவிட்டால் தடையில்லை தான்.

இதுவும் அதுதான்,
அதுவும் இதுதான்,
இடம் மாறிய இதயம் தான்,
இருந்து கிடப்பது தவிப்புத்தான்.

இதயம் இதயம் தான்,
இரவும் பகலும்
உன்பேரைச்சொல்லும்
ஒலிபெருக்கித்தான்.

துரு துரு கண்கள்தான்,
தூது போனது பெண்மைதான்.

துடி துடிக்கும் இளமைதான்,
தூண்டில் போட்டது இந்த மைனர் தான்.

மையல் பூசிய அழகிதான்,
மயங்க வச்சது அவள் விழிகள் தான்.

அந்த அழகைக்கட்டிய விழிகள்தான்,
அள்ளித் தந்தால் சுகம் தான்.

கொள்ளைபோனது மனம் தான்,
கொதித்தேக் கிடப்பது அவள் பருவம் தான்.

பொழுது சேரும் நேரம்தான்,
போகாது வீசும் இன்பக் காற்றுதான்,
விருந்து படைக்கும் உன் அழகுதான்,
நெருங்கி வந்தால் போதும் தான்,
நெஞ்சில் தீரும் பாரம் தான்,
கொஞ்சிப்பேசும் இதழ்கள் தான்,
கொஞ்சம் உரசிக்கொண்டால் ஊடல்தான்,
வஞ்சி இவள் விழிகள் போடும்
நெஞ்சில் சிறைதான்.

அள்ளிப் பூசும் ஆசைதான்,
அப்புறம் என்றாள் வரும்,
தாகம் தான்.
திரண்டுவந்த மயக்கம் தான்,
திண்டாட வைத்தது,
வெட்கம் தான்.
கொண்டாடி பார்க்க ஆசைதான்,
கொட்டும் பனியாய் சுமக்க ஆசைதான்.

அந்திமாலை அழகுதான்,
அந்த நேரச் சாரல்தான்,
பிந்தி வந்த பொழுதுதான்,
பிழிந்து எடுத்த அழகுதான்.

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (9-Jun-21, 11:32 pm)
பார்வை : 41

மேலே