உன் மேல் காதல் கொண்ட வேளையில்
காகிதப்பூ வாசம் தந்தது!
கண்ணீர்த்துளி வைரம் ஆனது!
தென்றல் இன்று சேலையாய் தீண்டுது!
தேன்துளி இன்று தீர்த்தம் ஆனது!
கோடி நிலவுகள் என்னுள் உதயம் ஆனது!
கடிகார முட்கள் நகர மறுக்குது!
காலமும் நேரமும் உறைந்து போனது!
பனித்துளி சேர்த்து மாலை கோர்த்தது!
பாதரசம் பாலாய் இனித்தது!
வெண்மேகம் இன்று கைகுட்டை ஆனது!
பேனா கொஞ்சும் பூல்லாங்குழல் ஆனது!
மலர்கள் மொத்தம் நறுமணம் இழந்தது!
வானவில் கொஞ்சம் வண்ணம் மறந்தது!
சிற்பம் இன்று என்னை பார்த்து கண் சிமிட்டும்!
சித்திரம் சிறிதாய் என்னை கேலி பேசும்!
இத்தனையும் நடந்ததடி
இனியவளே!
உன் மேல் காதல் கொண்ட வேளையில்!