கொரோனா டைரிஸ் நாய் பாஷை - இது உங்களுக்கான தண்டனையா

கொரோனா டைரிஸ்

"நாய் பாஷை" - இது உங்களுக்கான தண்டனையா??

நீங்கள் எப்போது தனிமையை அனுபவித்து இருக்கிறீர்கள்??
கொரோனா வந்தா தனிமைதாங்க !! என்கிறீர்களா??
நான் கேட்பது அது அல்ல! வாழ்விலும் உள்ளத்திலும் பற்றிக்கொண்ட தனிமையை.
உடலும் உள்ளமும் கடக்க முற்படும் தனிமையை!
நான் அறிந்த தமிழ் ஆசிரியர் தனிமையை பற்றி கூறுகையில்,
"தன்னை பெற்றவர்களும்;தான் பெற்றவர்களும்; தன் சுற்றமும்,நட்பும்,கால சுழற்சியில் ஒருவர் பின் ஒருவராக மடிந்து போவதை கண்டும், வயோதிக காலத்தில் தன்னை ஆதரிக்கவும், அரவனைகவும் ஆள் இன்றி,மரணம் வராதா?! என மரணத்தை எதிர் நோக்கி ஒருவன் தன் காலத்தை கடக்கும் "தனிமையை" வாழ்க்கை ஒருவனுக்கு விதிக்கும் ஆக சிறந்த "தண்டனை"என்பார்!!
இப்படி ஏன் காலம் நம்மை வஞ்சிக்க வேண்டும்?? சற்று பின் நோக்கி சிந்தியுங்கள்.
உடலிலும் உள்ளத்திலும் உள்ள வீரியதின் காரணமாகவும்,ரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் கொதிப்பின் காரணமாகவும் எத்தனை பழிகளையும் பாவங்களையும் சொல்லாலும்,செயலாலும் எண்ணதினாலும்,எண்ணத்தின் உந்துதனினாலும்,அத்தகைய செயல்களின் பிரதிபலன்களை அறிந்தும்,புரிந்தும்,தெரிந்தும் கூட செய்திருப்போம்.
ஆம் அல்லவா??
அப்படி செய்த செய்யல்களுகான தண்டனை??
"கொரோனாவே போதும் ! இதையே கடக்க முடியல!! என்கிறீர்களா??
இதை கூட கடந்துவிடலாம் மக்களே!
ஆனால் ஆக சிறந்த தண்டனை என அந்த தமிழ் ஆசிரியர் மேற்கோள் காட்டிய தணிமையை! கடக்க முடியுமா??
அப்படி கடக்க முடியும் என்பவரும் , கடக்க முற்படுபவரும் கற்றுக்கொள்ளுங்கள் "நாய் பாஷையை"
நான் பக்கங்களை கடக்கிறேன்.. பயணியுங்கள் என்னுடன்!
அவர் 50ஐ கடந்த வயோதிகர்.நான் பெரும்பாலும் அவர் தனது பொமரேனியன் நாய் குட்டிகள் இரண்டை நடைபயணம் கூட்டிச்செல்வதை அவ்வபொழுது காண்பேன்.நாங்கள் மரியாதை சமிக்ஞைகளை பரிமாறிக் கொள்வோம்.
எனது வண்டியின் சிகப்பு விளக்கின் பிரதிபலிப்பை என் வெள்ளை சட்டையில் குருதி என எண்ணி பதறினார். மாற்றும் ஒரு முறை முக கவசத்தையும் தாண்டி என்னை அடையாளம் கண்டு மகிழ்ந்தார். அடுத்து பேச துணிந்து பேசியவர், தன் மனைவி மக்கள் வெளி நாட்டில் இருப்பதாகவும், தான் வேலை நிமித்தமாக இருந்து ஓய்வு பெற்றதனால் இங்கேயே இருந்து விட்டதாகவும் கூறினார்.
நான் அவர் தன் ஓய்வூதிய நாட்களை அமைதியாகவும்,இனிமையாகவும் கடக்கின்றார் என எண்ணி இருந்தேன்.
ஆனால் அது அவரின் கதை அல்ல! இது கதையும் அல்ல!
நான் கேட்ட கதை யாதெனில்...
அவர் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றியவர்
ஒரு மனைவி!
இரு பிள்ளைகள்!!
பட்ட படிப்பின் காரணமாக வெளிநாடு சென்ற மகள் அங்கே காதலில் பட்டம் பெற, செய்வதறியாது தனது மகளின் விருப்பதிற்கேற்ப விரும்பியவனுகே மணம் முடித்து வைத்தார் மனைவியை கடந்த தாய்!
விளைவு கணவனின் கோபத்திற்க்கு ஆள் ஆகி மகனுடன் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்!
அவ்வபோது தந்தையை காண வந்த மகனை கொண்டு சென்றது ஒரு சாலை விபத்து!
இப்போது அந்த தாய் தன் மகளுடன் வெளிநாட்டில்.
ஓய்வு பெற்ற இவரோ இங்கு பொமரேனியன் நாய் குட்டிகளுடன் நடைபயணம்!!
இந்த முன் கதை சுருக்கத்தை விவரிதவர் முற்று பெரும்முன் கூறுகையில் "அந்த நாய்குட்டிகள் தான் அவரது வாழக்கை, அவர் எப்போதும் அந்த நாய்களுடன் தான் பேசிக்கொண்டு இருப்பார்"
"நாய் பாசஷை" கத்துகிடார் போல!! என முடித்தார்.
இப்போது மக்களுக்கு தலைப்பு காரணம் புரிந்திருக்கும்!
மகளின் காதலை கருத்தில் கொண்டு யோசித்து இருந்தால் ??
இவரது மனைவி மகளுக்காக துணிந்து எடுத்த முடிவின் காரணத்தை இவர் அறிய முற்பட்டிருந்தால்??
மகன் உயிருடன் இருந்திருப்பான்!
இவரும் தன் வீட்டில் மனைவி மக்களுடன் பேசிக்கொண்டிருப்பார் "மனிதர்களின் பாஷையில்"
ஆனால் இன்றோ ?? " நாய் பாஷை"
உங்கள் தேர்வு என்ன?? மக்களே!!

- தினேஷ் ஜாக்குலின்-

எழுதியவர் : - தினேஷ் ஜாக்குலின்- (14-Jun-21, 12:54 am)
சேர்த்தது : Dinesh Jacqulin
பார்வை : 87

மேலே