கனவுக்கு எது நிஜம்
கனவுக்கு எது நிஜம்
கடலுக்கு எது எல்லை
நதிக்கு எது பாதை
ஆசைக்கு எது வெட்கம்
இன்பத்திற்கு எது துன்பம்
இரவுக்கு எது வெளிச்சம்
வெளிச்சத்திற்கு எது இருட்டு
அழகிற்கு எது அசிங்கம்
பார்வைக்கு எது குருடு
இதழுக்கு எது ஊமை
சிந்தனைக்கு எது ஓய்வு
ருசில்லாமல் எது உணவு
உறவுக்கு எது பகை
அன்புக்கு எது முடிவு
மனதுக்கு எது உருவம்
இளமைக்கு எது முதுமை
ஆண் பெண் வாழ்க்கையில்
ஆசையில்லாத உலகம் எங்கே