கூண்டுப் பறவை

கூண்டில் அடைபட்ட பறவை
அழகிய இரு சிறகுகள்
சுவாசிக்கக் காற்றுண்டு
ஆனால் பறந்திட காற்று வெளியில்லை !
கூண்டுப் பறவை
பாலும் பழமும் உண்டு உண்டிட
ஆனால் பறந்திட வானமில்லை !
கூண்டுப் பறவை
இனிமையான குரலுண்டு பாடல்
ஆனால் ஒரு நாளும் சுதந்திர கீதம் பாடியதில்லை !