ஒரு ரூபாய் நாணயம்

தலையா..?பூவா...?_என
அண்ணனுக்கும் தங்கைக்கும்
தீர்ப்பை வழங்கிடுவாள் அன்னை
ஒரு ரூபாய் நாணயத்தால்!!
பத்து விரல்களில் மோதிரமாய்
அப்பளம் வாங்கி அழகு சேர்த்திடுவாள் அன்னை
ஒரு ரூபாய் நாணயத்தால்..!!
முற்றத்தில் தாயே என்று அழைத்தவருக்கு கொடைவள்ளலாக
தெரிந்திடுவாள் அன்னை
ஒரு ரூபாய் நாணயத்தால்..!!
பள்ளி செல்லும் தன் குழந்தையின்
முகத்தில் மொத்த சிரிப்பையும் பார்த்து ரசிப்பாள் அன்னை
ஒரு ரூபாய் நாணயத்தால்..!!
கோடி கொடுத்தாலும் ஈடாகாது
என் அன்னை கொடுத்து சென்ற
ஒரு ரூபாய் நாணயத்திற்கு..!!

எழுதியவர் : Pandiselvi azhagarsamy (16-Jun-21, 10:55 pm)
Tanglish : oru rupai naanayam
பார்வை : 34

மேலே