நித்தம்நீ பூப்பறிக்கும் காலையில்

புத்தனின் அமைதியை அவன் கருணை விழிகளில் ரசித்தேன்
சித்தனின் ஞானவழியை அவன் தவக்கோலத்தில் பார்த்தேன்
நித்திரை கலைந்தபோது எழும் ஞாயிறின் கதிர்களை ரசித்தேன்
புத்தம்புதுக் கவிதைகளை எழுத்தின் திரைப்பக்கங்களில் படித்தேன்
சித்திரமாய் விரியும் அழகை அந்தி வானத்தில் ரசித்தேன்
புத்தகமாய் விரியும் புன்னகையை பூவிழிகளின் அமைதியை
நித்தம்நீ பூப்பறிக்கும் காலையில் கவியும் அந்தி மாலையில்
சத்தியமாய் தரிசித்து இருவேளையிலும் மனதில் அருச்சனை செய்கிறேன்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Jun-21, 10:58 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே