என் கவிஞருக்கு பிறந்தநாள்

என் கவிஞருக்கு பிறந்தநாள்
(24.06.21)

உன்னைப் பற்றி எழுத எழுத
தமிழும் மணக்குதையா
என் மனமும் இனிக்குதையா
உள் உணர்வும் சிலிர்க்குதையா

அனுபவித்து வாழ்ந்தவனே
வாழ்ந்து அனுபவித்தவனே
வாழ்க்கையின் சாராம்சத்தை
வரிகளிலே சொன்னவனே

பிறப்பும் இறப்பும்
இடைப்பட்ட வாழ்வும்
உன் எழுத்துக்களில்
அடங்கி விட்டனவே

உன் எழுத்தின் வீரியத்தை
என்றோ உணர்ந்தவன் நான்
அது தரும் தாக்கத்திலே
ஆன்ம சுகம் பெறுகின்றேன்

சகலத்தையும் சரளமாக
சத்தமின்றி சொன்னவனே
சத்தான உன் எழுத்தில்
சங்கமம் ஆகிவிட்டோம்

வாழ்க்கை பாடமாய்
கீதையின் உட்பொருளாய்
உன் எழுத்தும் ஜொலிக்கிறதே
உண்மையும் அதுதானே

மனதிற்கு இதமாய்
உள்ளத்தில் ஊடுருவி
எளிதாக புரியும்படி
எதையும் சமாளிக்கும்
வரிகள் பல தந்து

என்றும் என்னுடன்
பயணித்து வருபவனே
உனக்காக ஒரு கவிதை
நீயும் ஏற்றுக் கொள்

ஆனந்த் சுப்ரமணியம்
தேதி - 23.06.21. நேரம் - இரவு 9.48 மணி

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (24-Jun-21, 10:00 am)
பார்வை : 48

மேலே