மௌனம்

மௌனம் என்றால் என்ன
என்பதை "மௌனமாக"
சிந்தித்தேன் ..!!

ஞானிகளின் மௌனத்தில்
நல்ல சிந்தனை பிறக்கும்

மனிதர்களின் மௌனத்தில்
பிரச்சனைகள்
அமைதி பெறும்
ஆனால்..முடிவு பெறாது ..!!

மௌனமாக இருப்பவர்களை
கோழை என்று எண்ணாதே
அவர்களின் மௌனம்
கலைந்து விட்டால்
புரட்சி கூட உண்டாகும் ..!!

காதலில் மௌனம்
கலந்துவிட்டால்
காற்றாற்று வெள்ளம்போல்
காதல் பெருக்கு எடுத்து ஓடும் ..!!

ஆழ்கடலின் மௌனம்
ஆபத்தின் எச்சரிக்கை ..!!

இப்படியாக ஒவ்வொரு
மௌனத்திலும் ஒரு பொருள்
இருக்கத்தான் செய்கிறது ..!!

முடிவில் புரிந்து கொண்டேன்
"மௌனம்" என்பது முடிவல்ல ..

ஒரு தொடக்கத்தின்
ஆரம்பம் என்று
புரிந்து கொண்டு
மௌனமாக இருக்கிறேன் ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (27-Jun-21, 11:19 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : mounam
பார்வை : 204

மேலே