வேட்கை - 7

வேட்கை - ௭

பிரியா ஒரு ஆட்டோவை பிடித்துச் சுந்தர் வீட்டு அட்ரஸை சொல்லி போகச் சொன்னாள். ஆட்டோவை அங்கேயே நிற்க சொல்லி விட்டு அவன் வீட்டுக் கதவை தட்டினாள்.
சுந்தர் வீட்டில்தான் இருந்தான். வீட்டுக்கு வந்ததும் மோனிகாவுக்குப் போன் போட்டான். அவள் எடுக்கவில்லை. அவளிடம் தவறாக நடந்து கொண்டு விட்டோமே என்னும் குற்ற உணர்வு சிறிது கூட அவனிடம் இல்லை. உண்மையைச் சொல்லவதானால், ”மோனிகாவுக்கு மனசு சரியில்லை. அதனால்தான் அப்படித் தன்னிடம் அப்படி நடந்து கொண்டாள் . தன் மேல் இன்னும் பிரியமுடன் இருக்கிறாள்” என்று அவன் மனம் நம்பியது. அவனுடைய கலக்கம் பிரியாவைப் பற்றிதான். அவளை மோனிகா வீட்டில் பார்த்ததும், இவ எங்கே இங்கே வந்தாள் என்று மனம் கலங்கிய சுந்தர், கவலையை மறக்க நல்லா குடித்தான். போதையில் படுத்து இருக்கும் போது வாசல் கதவு தட்டும் சப்தம் கேட்டது. கதைவைத் திறந்தான். புயல் உள்ளே நுழைவது போல் பிரியா உள்ளே நுழைந்தாள்.
ஹாய், பிரியா ! எப்படி இருக்கே?
”நான் இருக்கிறது இருக்கட்டும். என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வாக்கு கொடுத்துட்டு அமைதி ஆயிட்டிங்களே, என்ன விஷயம்? என்னை எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க?”
கல்யாணமா....? நா மனசு மாறிட்டேன். என்னை மன்னிச்சுடு.
”நல்ல குடிச்சிருக்கீங்களா?”
”எனக்கு... உன்னைப் பிடிக்கலை. என்னை மன்னிச்சுடு.”
”உங்களுக்கு மனசாட்சியே கொஞ்சம் கூட இல்லையா? கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வாக்கு கொடுத்துட்டு இப்போ காலை வார்றீங்களே. என்னை நூறு தடவை கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுத்து இருக்கீங்க. உங்களேயே நம்பிட்டு இருந்த என்னை ஏமாத்தாதீங்க.” என்று கத்தினாள். அவள் மார்பு விம்மி தணிந்தது.
”சாரி. என் மனசிலே நீ இப்போ இல்லே. நம் நண்பர்களாக எப்பவும் இருக்கலாம்..”
”என்ன நேர்ந்தது உங்களுக்கு? நான் அழகில் குறைந்து விட்டேனா? எதற்காக என்னை உங்களுக்குத் தீடிரென்று பிடிக்காமல் போய் விட்டது? அது சரி, நான் உங்களுக்கு வாங்கிக் கொடுத்த மொபைல் எங்கே ?” என்றாள்.
”எங்கேயோ தொலைத்து விட்டேன்.”
”நீங்க யாருக்காவது அதைக் கொடுத்தீர்களா?”
”இல்லை. நான் கொடுக்கவில்லை.”
”அப்ப என் கூட வாங்க. நான் ஒரு இடத்திலே அந்த மொபைலை பார்த்தேன். நீங்க பார்த்து கன்பர்ம் பண்ணுங்க,. உடனே கிளம்புங்க. ஆட்டோ வெளியே நிற்கிறது.”
அவன் தயங்கினான். ”இல்ல. நான் வரலை.”
”நீங்க தப்பு பண்ணலைன்னா உடனே புறப்படுங்க.”
குடிவெறியில் இருந்ததால் அவனால் யோசித்துப் பதிலளிக்க முடியலை.. அவன் யோசிக்கவும் அவள் விடவில்லை. அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஆட்டோவின் அருகில் சென்றாள்.
அவள் முதலில் அமர்ந்து அவன் கையைப் பிடித்து இழுத்து தன் பக்கத்தில் அமரச் செய்தாள்.
”டிரைவர், வந்த இடத்துக்கே போ” என்றாள்.
ஆட்டோ வேகமாய் சென்றது.
மோனிகா வீட்டுக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்ட சுந்தர், எப்படியாவது ஆட்டோவிலிருந்து தப்பித்துக் கொண்டு போகத் துடித்தான். அங்குப் போய் அவளிடம் அவமானப் பட அவன் விரும்பவில்லை.
சிக்னலுக்காக ஆட்டோ நின்றது. அது தான் சமயம் என்று ஆட்டோவிலிருந்து துள்ளிக் குதித்து ஓடினான். ஒரு பைக்கின் மீது மோதி தடுமாறி விழுந்தான். விழுந்த அவன் மீது அந்த வழியாக வந்து கொண்டிருந்த லாரி ஏறியது. இரத்த வெள்ளத்தில் மிதந்தான், அவன் ஆத்மா காற்றில் கரைந்தது.
அவன் முடிவை அவனே தேடிக்கொண்டான்.
ஆட்டோவிலிருந்து இதைக் கவனித்த பிரியா, டிரைவர் வண்டியை எடு அந்தப் படுபாவிக்குத் தக்க தண்டனை கிடைத்து விட்டது. தவறு செய்பவனுக்குத் தண்டனை நிச்சயம் என்பது கடவுளின் சட்டம்” என்றாள் மகிழ்ச்சியுடன்.
****** நிறைவு ******

எழுதியவர் : SIVASRI (29-Jun-21, 9:36 pm)
சேர்த்தது : sivasri
பார்வை : 87

மேலே