காலத்தின் பாதையில் பயணம்
கோடி ஆசைகளை
நெஞ்சில் சுமந்து கொண்டு
மயிலொன்று ஆடக் கண்டேன்
மனதிலே....
மயிலாட எனை மறந்து
கனா கண்டேன்
தூக்கத்திலே....
ஏனோ...?
கனா முடியும் முன்னே
கலைத்துச் சென்றது காலம்
என் ஆசைகளை....
ஆனாலும்
வாழ்கிறேன்....
ஆசைகளை நெஞ்சில்
சுமந்தவளாய் அல்ல....
காலத்தின் வழி
பயணிப்பவளாய்.....!