கயிற்று கட்டிலா காம தொட்டிலா♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
கயிற்று கட்டிலா காம தொட்டிலா???♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
கான்கிரீட் காடுகளில்
பத்துக்கு பத்து
புறா கூடு அறையில்
செயற்கை குளிரில்
சொகுசு கட்டிலில்
திரும்பி, திரும்பி
படுத்தேன்
உறக்கம் வரவில்லை
ஏன் என்று தெரியவில்லை
எப்படியோ அதிகாலை
தூக்கம் கண்களை தழுவ
கனவு வந்தது
சித்திரை தன் முத்திரையை
காலையில் பதித்தாலும்
இரவில் இளகிய மனமுடன்
செயல்பட
எங்கள் குடிசை வீட்டு வாசலில்
வானுயர்ந்த வேப்ப மரத்து அடியில்
கயிற்று கட்டிலில் கால் நீட்டி
கைகளை தலைணையாய் வைத்து
அண்ணாந்து படுத்தேன்.
நீல வானில் நீந்தி சென்ற
அந்த வட்ட நிலா
வெண் மேகங்களிடையே
மறைந்தும், தெரிந்தும் பவனி வர
நட்சத்திர பட்டாளம் அதனை உற்சாகமாக வரவேற்றது.
குளிர் காற்று வெற்றுவுடப்பில் பட்டுவிட
கைலியே உச்சி முதல் பாதம் வரை போர்வயாய் மாறியது.
எங்கோ அழும் குழந்தைக்கு தாலாட்டு
பாடும் அந்த அன்பு தாயின் குரல் காற்றில் ரீங்காரமிட
பரவசம் அடைந்த உடல் உற்சாகம் அடைய
உறக்கம் உறவாடி அணைத்தது.
கனவுக்குள் கனவு காண
வானத்து தேவதை
கோலவிழி
வண்ண மயிலாய்
மான் விழி மயக்கும் கண்களுடன்
மதுரச மாதுளம் இதழுடன்
நூல்யிடையுடன்
தடாகத்தில் முளைத்த மலர்ந்த
தாமரை பாதத்துடன்
தேன்குழல் வரல் கொண்டு
என்னை தட்டி எழுப்பினாள்
கட்டி அணைத்தாள்
முத்தம் கொடுத்தாள்
கயிற்று கட்டில் கயிறு போல்
பின்னி பிணைந்தோம்
கயிற்று கட்டில் காம கட்டில் ஆனது
சொர்கம் எதுவன சுட்டிகாட்டினாள்
அந்த கானகத்து சுந்தரி
இன்பம் எதுவன இடம் தொட்டு காட்டினாள் அந்த
இந்திரலோகத்து அழகு ராணி
சிற்றின்பத்தில் சிலாகித்து
ஆர்பரித்த நாங்கள் இருவரும்
வின்னை தொட்ட இன்பத்தில் மிதக்க
விமோசனம் அடைந்த இருமனமும் மகிழ்ச்சியில் சஞ்சாரிக்க
விழா கோலம் பூண்ட நிகழ்வு( கனவு)
அத்தனையும் தரைமட்டம் ஆனது
ஒரே நொடியில்
அந்த கைபேசி அலாரம் ஓயாமல்
ஒலித்ததால்.
- பாலு.