பணம் இல்லையேல் காதலும் இல்லை

எனக்கோ வயது இருபத்தி நாலு
ஓரிடத்தில் நிக்குதில்லை காலு

சின்னப்பெண் வயதோ இருபது
அவள் கண்கள் பேசும் அறுபது

நாள் கன்னியிடம் எதிர்பார்த்தது
அவள் கண்கள் என்னை பார்ப்பது

மாதுவிடம் நான் சென்றேன் தூது
மோதினாள் என்மீது ஒரு மோது

அவள் மோதியதும் மறக்கவில்லை
அவளும் என்னை மறக்கவில்லை

மீண்டும் கண்டேன் அவள் விழிகள்
அவள் சொன்னாள் காதல் வழிகள்

அடுத்த சந்திப்பு அழகிய பூங்காவில்
ருசித்தோம் சுவையை மாங்காவில்

நாட்கள் கடந்தது மாதங்கள் பறந்தது
என்னைப்பிரிந்து எங்கே சென்றாள்?

உடல் மனம் நலிந்து பித்தானேன்
காதல் தோல்வியின் முத்தானேன்

பணம் இல்லையேல் வாழ்வும் இல்லை
பணமே வாழ்வென்றால் காதல் இல்லை

அவள் பிரிவின் காரணம் பணம்தான்
அவள் காணாதது என் குணம்தான்

திருமணம் இன்றி வாழ முடியாதா?
மனா உறுதி இருப்பின் முடியாததா?

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (8-Jul-21, 5:27 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 71

மேலே