துங்கபத்திரா நதிநீர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மாதுங்க பத்திரிநீர் வன்றாகம் என்புருக்கி
ஓதுங் கரப்பான் அரோசிகநோய் - தாதுநட்டம்
நேத்திரதோ ஷங்காச நீரடைப்பு மெய்விவண்ணக்
கோத்திரமென் றோதிவைபோக் கும்

- பதார்த்த குண சிந்தாமணி

இது வெப்பம், என்புருக்கி நோய், கரப்பான், உணவில் வெறுப்பு, விந்து இழப்பு, கண்புகைச்சல், இருமல், மூத்திர கிரீச்சரம், உடல் நிறமாற்றம், காமாலை ஆகியவற்றைப் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Jul-21, 8:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே