உன்னை சந்தித்த நாள் முதலாய்
உன்னை சந்தித்த நாள் முதலாய்,
கவிதைகளும் கவலை கொள்கின்றன
உன் வாசிப்பிற்காக!
என் இரவுகளும் ஏங்கி தவிக்கின்றன
உன் கனவுகளுக்காக!
எழுத்துக்களும் ஆவல் கொள்கின்றன
உன்னை பற்றிய கவிதையில் இடம்பெறுவதற்காக!
என் வாசலும் காத்திருக்கின்றன
உன்னை வரவேற்பதற்காக!
என் வாழ்வும் காத்திருக்கிறது
உன்னுடன் வாழ்வதற்காக!