மலரட்டும் மனிதநேயம்
உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் ஒன்றானார் வெள்ளத்தால்….!
கயவர்களும் கனிவானவர்களும்
கலங்கிப்போனர் இழப்புகளால்…!
ஓலைக் குடிசையொடு
ஓட்டுவீடும் ஒன்றாச்சு….!
மழைநீரோடு மாட
மாளிகையும் மிதந்தாச்சு…!
வீதிதோறும் வெள்ளம்வந்து
விபரீதம் பெருகியதால்…!
சாதியெலாம் வெள்ளமதில் சாய்ந்துவிட்ட நிலைகண்டோம் !
உணவும் குடிநீரும்
உயிர்வாழ தேவைகளாச்சு…!
ஆடம்பரம் ஆள்பலம்
ஆணவமும் போயாச்சு…!
வாடுகின்ற பயிர்கண்டு
வாடுகின்ற உளங்கொண்டு…!
வள்ளலார்தம் வாழ்க்கைவழி
வெளியுலகிற் காட்டிநின்றோம் !
வானை எட்டிவிட்டோம்
விரலாலே சுழற்றிவிட்டோம்…!
வாடிநின்ற வாழ்வைபற்றி வெட்டிகதையா பேசிவிட்டோம்…!
கொரோனா எனும் கோர பிணி…!
கோர தாண்டவம் காணும் போதும்…!
எட்டிநின்று பார்க்கவில்லை
எச்சரிக்கை யாகவில்லை…!
ஒட்டும் என்று யோசித்து
ஒதுங்கவில்லை..!
ஒடுங்கிபோன உடம்பை -அங்கு
அன்பினில் தோய்த்தெடுத்து…!
அருளுடன் அணைத்துக்
காத்து என்பெலாம்…!
பிறர்க்காய் ஈயும்
ஈடிலா உயர்ந்த பண்பை ….!
எம்மக்கள் நிகழ்த்திக்காட்டி
சில மாக்களுக்கு புத்திப்பூட்டி…!
மனிதநேயம் காத்து விட்டோம்
மனதார மகிழ்வுப்பெற்றோம்…!
-ஸ்ரீவித்யாகலைவாணி
ஆற்காடு.