கடவுள்

முற்றுமுணர்ந்த ஞானிகளுக்கு கடவுள்
உருவமாய்த் தன்னைக் காட்டி காட்சிதந்தான்
இதுவே இன்று நாம் கோயில்தோறும்
காணும் கடவுளின் அர்ச்சாவதார ஸ்வரூபம்
கோயிலில் எழுந்தருளும் இறைவடிவமெல்லாம்
ஞானிகள் கண்டறிந்த உண்மை வடிவமென்றறி
கடவுளைக் கண்டாயா என்று இரணியர்கள்
கேட்டால் கண்டவர்க் கண்டதை ஏற்றுக்கொள்கிறேன்
கடவுளைக் காண்கின்றேன் கோயில் தோறும்
என்று நிமிர்ந்தே பதில் கூறுவாய் நெஞ்சே

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (20-Jul-21, 12:28 pm)
Tanglish : kadavul
பார்வை : 147

மேலே