சிகரமே திலகமே

" சிகரமே! திலகமே!

"கலை உலகின் ஒப்பற்ற நாயகன்!
அந்த 'கலைமகளுக்கே செல்ல சேய் அவன்'!

நடிப்பதற்கு என்றே தோன்றியது
அவன் 'பிறப்பு',
அந்த நடிப்புக்கே அவனால்தான்
'சிறப்பு '.

'வெற்றி! வெற்றி! ' என்று கூறி உதித்தான்,
சுற்றி சுழன்று, சூறாவளியாய் நடித்தான்!

கற்றுக்கொள் இதுதான்,
நடிப்பென்று சிரித்தான்!
உற்றுப் பார்த்து அதிசயித்த மனங்களை இறுகப்
பற்றி களித்தான்.

நடிப்பே தன் உலகம் என நினைத்தான், அந்த நடிப்புக்கே புது உலகம் ஒன்றை படைத்தான்!

கலைத்தாயின் 'தவப்புதல்வனாய்,'
'ஆண்டவன் கட்டளையை' ஏற்ற 'தெய்வமகனாய்',ஜொலித்தான்,
சாதனைகள் பல செய்து
ஜெயித்தான் !.

அவன் உதடு அசைத்தான்,
அகிலம் அசைந்தது,
அவன் உருகி நடித்தான்,
உலகம் கண்ணீர் வடித்தது.

இன்று எங்கே அவன்?
தெரியவில்லை...?

நடிப்புக்கு அவன் 'இலக்கணம்'
அந்த நடிப்புக்குள்தான்
இன்றும் அவன் இருக்கணும்!.

நடிப்பின் 'உயிர்த்துடிப்பு' அவன், நடிக்கும் தாகத்தில் வருவோரின் 'நாடித்துடிப்பு' அவன்!.

கலைகளில் அவன் நிலைத்து வாழ்வான் !
கலா ரசிகர்களை என்றென்றும ஆள்வான் !

"வாழ்க நம் நடிகர் திலகம் அவர்களின் புகழ்".

எழுதியவர் : (21-Jul-21, 5:21 pm)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 1691

மேலே