கண்கள் இரண்டிலும் திராட்சை

கண்கள் இரண்டிலும் திராட்சை
மது சிந்துமோ
இதழ்கள் இரண்டும் மலர்கள்
தேன் சிந்துமோ
புன்னகையில் ஓர் மௌனம்
முத்துக்கள் சிந்துமோ... சிந்தாதோ
கன்னங்கள் இரண்டிலும் கனிகள்
ஆப்பிளோ மாங்கனியோ
இதயம் ஒரு பூந்தோட்டம்
காதல் கவிஞனுக்கு அனுமதி உண்டோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (22-Jul-21, 6:48 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 82

மேலே