தமிழ்த் தேன், மலைத்தேன் குடித்தேன்

தமிழ்த் தேன், மலைத்தேன் குடித்தேன்!

"தேனென இனிக்கும் தமிழ்!"

கொல்லிமலைக் காட்டிலுள்ள ஓர் ஆளிடம் தேன் கொண்டு வரும்படி சொல்லியிருந் தேன் அவன் அன்று வாரமல் மறுநாள் வந்து
"நேற்றுத் தேன் கொண்டுவர மறந்தேன்" என்று வெறுங்கையோடு நின்றதால் சிறிது கோபித் தேன், .அவன் பேசினான்.

“நேற்றே கொல்லி மலைக்கு நடந் தேன்,
பலவிடங்களில் அலைந் தேன்,
இறுதியில் பெரும் பாறையில் ஒரு மலைத் தேன்,
அதைக் கண்டு சிறிது மலைத் தேன்,
ஒரு கரண்டைக் கொடியை பிடித் தேன்,
ஏறிச்சென்று தேன், கூட்டை அடைந் தேன்,
அடைத் தேன்,
அதைக் கலைத் தேன்,
சட்டியில் பிழிந் தேன்,
நன்றாக வடித் தேன்,
தேன் பானை நிறைத் தேன்!
அதனைக் கண்டு மகிழ்ந் தேன்,
அதில் சிறிது குடித் தேன்,
தேனில் களித் தேன்,
உடல் களைத் தேன்,
போதை அடைந் தேன்,
கண் அயர்ந் தேன்,
எனை மறந் தேன்,
இன்றுதேன் காலை எழுந் தேன்,
உமை நினைத் தேன்,
கூடுவையில் தேனை அடைத் தேன்,
கையில் எடுத் தேன்,
விரைந் தேன், வழி நடந் தேன்,
இங்கு வந் தேன்,
இல்லம் சேர்ந் தேன்,
உம் இல்லாளைப் பார்த் தேன்,
இப்போதுதான் அவரிடம் கொடுத் தேன்,
என்று.முடித்தேன்!" என்றான்!

அடடா எப்படி தேன், ? எவ்வளவு தேன், ? ஒவ்வொரு சொல்லிலும் தேன், சொட்டுகிறதே!

"என்னே தமிழின் இனிமை."

பார்த் தேன் படித் தேன் ரசித் தேன் பகிர்ந் தேன்
------- இது, என் தமிழ் நேயர் ஒருவர் அனுப்பிய தேன் நிறை தேன்!

இதை நான் எடுத்தேன், வாயில் கவிழ்த்தேன்., குடித்தேன், அதில் பிடித்தேன் உமக்கு விடுத்தேன்!

**********************************************************************************
இது, அவர்க்கென் விடைத்தேன்!!

ஆகா!
பார்த்தேன், படித்தேன், அடைத்தேன், அடைத் தேன்!
பிழிந்தேன், பிழி தேன், ரசித் தேன், ருசித் தேன், ருசித்தேன், படித் தேன்! பல படித் தேன்!

தமிழ் குடித்தேன், தமிழ்க்குடித் தேன்! அமிழ்த் தேன், அமிழ்ந்தேன்!
மகிழ்ந்தேன், இது விடைத் தேன், கவித் தேன், தமிழ்த் தேன், விடுத்தேன், விடை தொடுத்தேன்!

பீடித்தேன், ஒரு பிடித் தேன், அதை, இணைத்தேன், இசைத்தேன், இசைத் தேன், அது கவித் தேன், ஒரு படத்தேன், நம் சுசித்தேன், ஸ்ரீநி வாஸ்த் தேன்!

அது மலர்த் தேன், அதை முகர்ந்தேன், முகம் மலர்ந்தேன், அதில் மணந்தேன், அகம் மகிழ்ந்தேன், அதைப் பகிர்ந்தேன்!
இதோ, "பார்த்தேன் ரசித்தேன் பக்கம் வரத் துடித்தேன்..." எனும் மலைத் தேன், பொதிகை மலைத்....... தேன்!!

https://youtu.be/IdlNG4FMs0U

https://youtu.be/RUeGItHimwI

எழுதியவர் : செல்வப் ப்ரியா - சந்திர மௌ (23-Jul-21, 8:30 am)
பார்வை : 68

மேலே