பணம் வந்தால் உண்மை நட்பும் பறந்து போகும்

ரவியும் சேகரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். கல்லூரியில் படிக்கும்போதிலிருந்தே இருவரும் நன்றாக பழகுபவர்கள். ரவி ஒரு பொது வங்கியில் கீழ் நிலை அதிகாரியாக வேலை செய்து வந்தான். சேகர் ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தான். இருவருக்கும் ஒரு வருடத்திற்குள்ளாகவே திருமணமும் நடந்து முடிந்தது. துரதிருஷ்டவசமாக இரண்டு வருடத்திற்குள் சேகர் வேலை செய்து வந்த கம்பெனி மூடப்பட்டு விட்டது. சேகருக்கு மீண்டு ஒருவரிடத்தில் வேலை செய்ய பிடிக்கவில்லை. எனவே அவன் தான் சேமித்து வைத்த பணத்தையும் மனைவி கொண்டு வந்த கொஞ்ச நகைகளையும் விற்று ஒரு சின்ன வியாபாரத்தை துவங்கினான். வியாபாரம் சுமாராக நடந்து வந்தது.

இதனிடையில் ரவியும் சேகரும் பல முறை, தம்பதியாக சில ஊர்களுக்கும் சுற்றுலா சென்று வந்தனர். ஒவ்வொரு வாரமும் இருவரும் சந்தித்து வந்தனர். ஒரு வருட காலம் ஆனது. சேகரின் வியாபாரம் கொஞ்சம் கொஞ்சமாக தொய்வு காண ஆரம்பித்தது. சில மாதங்களில் நஷ்டம் வர தொடங்கியது. மனைவியிடம் உள்ள நகைகள் அனைத்தையும் விற்றாகி விட்டது. அவனுடைய சேமிப்பு நிதியையும் கரைத்தாகிவிட்டது. இதை பற்றி சேகர் ரவியிடம் பகிர்ந்து கொண்டான். தனக்கு கொஞ்சம் பண உதவி செய்யுமாறு கேட்டான். 'உனக்கு எவ்வளவு பணம் தேவை' என்று கேட்டபோது, ' குறைந்தது 1௦,௦௦,௦௦௦ ரூபாய் தேவைப்படும் என்று சேகர் சொன்னான். சேகர் தன்னிடம் உள்ள சேமிப்பிலிருந்து 500000 ரூபாயை அவனுக்கு கொடுத்து உதவினான். பிறகு தான் வேலை செய்யும் வங்கியிலிருந்து சேகர் தொழில் செய்ய கடனாக 500000 ரூபாயை சேகருக்கு ஏற்பாடு செய்தான். மாதாமாதம் வங்கிக்கு 6000 ரூபாயை சேகர் செலுத்த வேண்டும். சேகர் ரவிக்கு மிகவும் நன்றி சொன்னான்.

அடுத்த மூன்று வருடங்களில் சேகரின் வியாபாரம் அமோகமாக நடை பெற்றது. அவன் வாங்கி கடனை தீர்த்து விட்டான். ரவி கொடுத்து உதவிய 500000 ரூபாயில் சேகர் மூன்று லட்சத்தை திரும்ப தந்தான். மீதி இரண்டு லட்சத்தை கூடிய விரைவில் தந்து விடுவான் என ரவி நம்பினான். ஆனால் ஒரு முறை கூட அவன் சேகரிடம் இதைப்பற்றி கேட்கவில்லை. உயர்ந்த நட்பு அல்லவா! நாட்கள் செல்ல செல்ல சேகர் ரவியின் வீட்டிற்கு செல்வத்தையும் குறைத்து கொண்டான். இதனால் ரவியும் சேகர் வீட்டுக்கு செல்வதை மிகவும் குறைத்து விட்டான். போனிலும் இருவரும் மிக குறைவாகவே பேசினார்கள். சொல்லவேண்டும் என்றால் சேகர் ரவியிடம் அதிகம் பேசுவதை தவிர்த்தான். ரவிக்கு சேகரின் போக்கு புரியவில்லை.

இதற்கிடையில் ரவியின் அப்பாவுக்கு கேன்சர் வியாதி வந்தது. அதற்காக ரவி மிகவும் செலவு செய்தான். ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி அப்பா பேரில் இருப்பினும் குறைவான பிரீமியம் என்பதால் கிட்டத்தட்ட 70% மருத்தவ செலவை ரவி தான் ஏற்றுக்கொண்டான். வங்கியிலிருந்து கடனும் வாங்கி கொண்டான். துன்பம் வந்தால் சுமந்து கொண்டு வரும் என்பது போல, அவன் முதலீடு செய்த இரண்டு கம்பெனிகள் திவாலாகி அவன் முதலீடு செய்த ரூபாய் 1௦௦௦௦௦௦ லட்சத்தில் ஒரு லட்சம் மட்டுமே திரும்ப கிடைத்தது. ரவிக்கு இரண்டு குழந்தைகள். பிரபலமான பள்ளி என்பதால் கல்வி செலவு அதிகம். இந்த நிலையில் ரவி மிகவும் அவதி பட்டுக்கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் மனைவி " உங்கள் நண்பர் சேகரின் வியாபாரம் இப்போது மிகவும் நன்றாக நடந்து கொண்டிருக்கிறது.தவிர அவர் உங்களிடம் வாங்கிய பணத்தில் 2௦௦௦௦௦ ரூபாயை இன்னமும் தரவில்லை. நீங்கள் அந்த பணத்தை சேகரிடம் கேட்டு வாங்குங்கள் என்று ஆலோசனை சொன்னாள். சேகரிடம் கொடுத்த பணத்தை மீண்டும் கேட்கக்கூட ரவிக்கு விருப்பமில்லை.ஆனால் அவன் பொருளாதாரநிலை அவனை இதற்கு கட்டாயப்படுத்தியது. போன் செய்து சேகரிடம் இது பற்றி பேசினான். சேகர் ரவியை தன் வீட்டிற்கு வர சொன்னான். ரவி அவனை நேரில் சந்தித்தபோது " நான் உனக்கு திரும்ப தர வேண்டியது ஏதும் இல்லையே ரவி" என்றான் சேகர். ரவிக்கு தூக்கி வாரி போட்டது. " என்ன சேகர், நீ என்னிடம் வாங்கிய பணம் 5௦௦௦௦௦ , ஆனால் திருப்பி கொடுத்தது 3௦௦௦௦௦. இன்னும் இரண்டு லட்சம் பணத்தை நீ இன்னும் எனக்கு தரவில்லை. உன்னுடைய வங்கி புத்தக விவரங்களை நீ பார்த்தால் உனக்கே விளங்கும் என்றான் ரவி மிகவும் வேதனையுடன். சேகரோ " இல்லை ரவி நீ மறந்துவிட்டாய் என நினைக்கிறன். கடந்த இரண்டு வருடமாக எனக்கு கடன் என்பதே இல்லை. உனக்கு கடனாக வேண்டும் என்றால் தருகிறேன்" என்று கூற, ரவி மிகவும் மனம் புண் பட்டான். இருப்பினும் அவனுக்கிருந்த பண பிரச்சினையால் அவன் " அப்படியே சேகர். எனக்கு 5௦௦௦௦௦ ரூபாய் கடனாக கொடு என்றான் . சேகர் " ரவி, நான் பொதுவாக 18% வட்டிக்கு தான் கடன் கொடுக்கிறேன். இருப்பினும் நீ என் நண்பன் என்பதால் உனக்கு 16 % வட்டிக்கு தருகிறேன். மாதம் முதல் தேதி எனக்கு வட்டி பணம் வந்து விடவேண்டும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை 50000 ரூபாயாக கடன் பணத்தை திரும்ப செலுத்த வேண்டும். "

ரவி இந்த வார்த்தைகளை கேட்டு சில நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் துன்பம் கலந்த துக்கத்தில் ஆழ்ந்தான். பின்னர் சேகரிடம் சொன்னான் " உனக்கு நான் கொடுத்த கஷ்டத்திற்காக வருந்துகிறேன். எனக்கு உன் கடன் தேவையில்லை. இன்றோடு நட்பு என்ற நம் கடனும் முழுமையாக தீர்ந்தது. இந்த கணத்திலிருந்து நீயும் நானும் தெரியாதவர்கள்." இதை சொல்லி விட்டு ரவி உடனே வீடு திரும்பினான்.

மனம் உடைந்து வீடு திரும்பிய ரவிக்கு அவன் மனைவி ஆறுதல் கூறினால். " வீணாக கவலை கொள்ளாதீர்கள். நாம் யாருக்கும் மனதாலே கூட தீமை நினைக்கவில்லை. நமது பிரச்சினைகள் நிச்சயமாக வெகு விரைவில் தீர்ந்து விடும். சாப்பிட்டு, தூங்குங்கள். நாளை காலை ஆஸ்பத்திரி சென்று அப்பாவை காண வேண்டும்;"

அடுத்த நாள் காலை விடிந்தது. ஆஸ்பத்திரியிலிருந்து ரவியின் சித்தப்பா பேசினார். " ரவி, உன் அன்பு அப்பா, என் பாசமான அண்ணன் இப்போதுதான் காலமானார்". இறுதி சடங்குகள் எல்லாம் முடிந்தது. கொஞ்ச நாட்களில் கொரியரில் ஒரு கடிதமும் வந்தது. அவர் ஆயுள் காப்பீடு பணம் 1000000 ரூபாய் ரவிபேரில் வந்தது. ரவி மனைவியிடம் சொன்னான் " நான் சேகரிடம் 500000 ரூபாய்க்கு போய் நின்றேன். இப்போது என் அப்பா அதற்கு இரண்டு மடங்காக 1000000 ரூபாயை எனக்கு கொடுத்து விட்டு இவ்வுலகை விட்டு போய் விட்டார். எனக்கு அப்பாவின் பாசமும் அன்பும் கடைசி வரை வந்து உதவி செய்கிறது, ஆனால் என் நட்போ விஷத்தைவிட கொடியதாகிவிட்டது "

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்ரமணியன் (29-Jul-21, 1:17 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 218

மேலே