விழி

மீன் விழிகளைக்
கொண்ட அவள்
மருண்ட மானாக
விழி விரிக்கையில்
அவள் கடைவிழி
உதிர்க்கும் விழியுதிரம்
தரை தொடுமுன்
என் கைத்தாமரையில்,
விலை மதிப்பில்லா
என் வைரமல்லவா?

எழுதியவர் : கவி பாரதீ (4-Aug-21, 10:05 am)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : vayili
பார்வை : 697

மேலே