யார் அந்த சாமியார்

யார் அந்தச் சாமியார்.

அமெரிக்க அதிபரின் மனநிலையில் ஒரு மாற்றம். எதற்கெடுத்தாலும் சீறிப் பாய்வதில்லை. மற்ற நாடுகளை மிரட்டுவதுமில்லை. அவர் ஒரு சமாதானப் புறாவாக மாறிவிட்டார்.

அவரின் ஆலோசகர்களுக்கு இது ஒரு புரியாத புதிராக இருந்தது. எங்களின் பிழைப்பில் மண்ணை வாரி போட்டுவிட்டானே இந்தப் பாவி, சொன்னது ஆயுத உற்பத்தியாளர்கள். இதை தொடர விடமுடியாது. இதற்கு ஒரு முற்றுப் புள்ளி இட்டே ஆகணும். FBI/ CIAஐ அணுகி அவர்களின் உதவியை நாடினார்கள்.

அவர்கள் அதிபரின் ஒவ்வொரு நடவடிக்கையும் உற்று அவதானித்தார்கள். விசாரித்ததில் அதிபர் வழமைக்கு மாறாக காலை காலை மற்றவர்களுக்கு புரியாத மொழியில் ஏதோ முணு முணுப்பது தெரிய வந்தது. அவரின் நண்பர்கள் சிலரை விசாரித்ததில் ஒரு உண்மை தெரியவந்தது. அவருக்கு பலகாலமாக இந்தியாவில் உள்ள ஒரு சாமியாருடன் தொடர்பு உண்டு எனவும் அவர் telepathy ஊடாக தன்னுடன் பேசுவார் எனவும் நம்பிக்கைக்கு உரிய சில நண்பர்களிடம் கூறியுள்ளார்.

இது FBI/CIA க்கு ஒரு புதிய பிரச்சினையே கிளப்பிவிட்டது. இந்தியாவில் தானே பல கோடி தெய்வங்கள். இன்னும் பல கோடி சாமியார்கள். அவர்களில் அதிபரின் சாமியார் யார் என எப்படி கண்டுபிடிப்பது.

அதற்கு ஒரு மிகவும் தந்திரமான வழி ஒன்று வகுத்தார்கள். அவர்களுடைய ஆதிக்கத்தில் உள்ள செய்தி நிறுவனங்களில் இப்படி ஒரு செய்தியை கசியவிட்டார்கள். அதிபருக்கு இந்திய நாடு, அதன் பழைமை வாய்ந்த கலாச்சாரம் எல்லாம் மிகவும் பிடிக்கும் என்றும், ஏன் அதற்கும் அப்பால் சென்று அதிபரும் அங்குள்ள ஒரு சாமியாரும் telepathy ஊடாக தினம் தொடர்பு கொள்வார்கள் என்றும் ஒரு செய்தியை மிகவும் மெதுவாக பரவ விட்டார்கள். அது காற்றுத்
தீ யென இந்தியா முழுவதும் பரவ ஒரு சிலர் இது தான் தக்க சமயம் என்று எண்ணி green card க்கு விண்ணப்பம் செய்தார்கள். ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் சாமி மார்களெல்லாம் முண்டி அடித்துக் கொண்டு "நீ இல்லை அது நான்" என்று அறிக்கை விட்டுக் கொண்டு இருந்தார்கள். அப்படிச் சில காலங்கள் சென்றபின் FBI/CBI அவதானித்தார்கள், ஒரு சாமியார் மட்டும் அறிக்கை ஒன்றும் விடாமல் மௌனம் சாதித்துக் கொண்டிருந்தார். விடயம் புரிந்தது. இவர் தான் அதிபரின் குரு

அதன் பிறகு அவரின் இடத்தை அறிய GPS மற்றும் உளவு பார்க்கும் இயற்கை கோள் என்றெல்லாம் முயற்சித்து அவர் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து விட்டார்கள்.

இப்ப என்ன செய்வது. Drone அனுப்பி கொலை செய்யலாம் என்றால் இந்தியா தற்போது அவர்களின் நேச நாடுகளில் ஒன்று. அவருடன் முதல் பேசிப் பார்ப்போம் என எண்ணினார்கள். இதை எல்லாம் முன்கூட்டியே அறியவல்ல சாமியார் கூடு விட்டு கூடு பாயும் அவர் வல்லமையைப் பாவித்து செங்கல்பட்டு வழியாக சைபீரியா பறந்து சென்று விட்டார்.

அவர்களின் எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிவுற அவர்கள் அதிபரை பதவியில் இருந்து எப்படி நீக்கலாம் என்று திட்டம் போட்டார்கள். அதில் அவர்கள் வெற்றியும் கண்டார்கள் . இதுவே அவர்கள் அரங்கேற்றிய திட்டம்.

ரம்பை, ஊர்வசியின் ( Mary , Juli) உதவியை நாடினார்கள்.
இந்த இருவரும் அதிபர் ஒரு காலத்தில் அவருடைய அப்போதைய அதிகாரத்தை பயன்படுத்தி தங்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டார் என்பதே அவர்கள் சாற்றிய குற்றம்.
அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பதவி விலகினார். திட்டம் போட்டவர்கள் கூடி மகிழ்ந்தார்கள்.
தற்போது சாமியார் கோவிட்19 இல்லாத இடம் தேடுகிறார்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (10-Aug-21, 5:04 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 76

மேலே