நூல் போன்ற மெல்லிடை

புகழேந்தியின் கலித்துறை


புளிமா. புளிமா. காய். மா. காய்

இழையொன் றிரண்டு வகிர்செய்த நுண்ணிடை யேந்தியபொற்
குழையொன் றிரண்டு விழியணங் கேகொண்ட கோப(ந்)தணி
மழையொன் றிரண்டுகைம் மானா பரணனின் வாச(ல்) வந்தாற்
பிழையொன் றிரண்டு பொறாரோ குடியிர் பிறந்தவரே

ஒட்டக்கூத்தர் பாண்டியன் மகளுடன் சீதனமாக வந்தப் புகழேந்தியை
வன்மத்தின் காரணமாய் சிறையடைத்தான். அதனால் மன்னர் மனைவி
கோபங்கொண்டு மன்னரை உள்ளே விடாமல் அறைக்கதவை சாத்தி விட்டாளாம்.
மன்னர் ஒட்டக்கூத்தனை அனுப்பி சமாதானப் பாடல் பாடச் செய்தானாம்.
ராணிக்கோ கூத்தன் பாட இன்னும் கோபமாகி rஇன்னொரு தாழ்ப்பளையும்
போடச்செய்தாளாம். அவள் கோபம் புகழேந்தி பற்றியது எனத்தெரிந்து
புகழேந்தியை விடுவித்து பாடச்செய்தானாம். ராணி உடனே கோபம் தீர்ந்து
மன்னருக்கு ஆசனம் கொடுத்து உட்காரச் செய்தாளாம்

இந்தக் கலித்துறை மிகவும் மாறுபட்ட தாக புகழேந்தி அமைத்திருக்கிறார் இந்த மோனைகள் ஐந்தாம் சீரில் அமைத்து ஒன்றாம் சீரிலும் இரண்டாம் சீரிலும்
இணை எதுகைகள் தனியாக அமைத்து சிறப்பித்துள்ளார்



'

எழுதியவர் : பழனி ராஜன் சேர்த்தது (17-Aug-21, 9:16 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 173

மேலே