நெளிந்து நெளிந்து நீந்தும் மீனும் பார்க்குதடி உன்னை

வளைந்து நெளிந்து மகிழ்ந்தோடும் நீரோடை
வளைந்த வானவில் வண்ண அழகில்நீ
வளைய லுடன்புன் நகையில்நீ குலுங்க
நெளிந்து நீந்தும் மீன்களும்நின் றுபார்குதடி

வளைந்து நெளிந்தோ டிடும்நன்நீ ரோடை
வளைந்த எழில்வான வில்வண்ணத் தில்நீ
நெளிந்துநீந் தும்மீனும் பார்க்குதடி உன்னை
வளையோசைப் புன்னகை யே

வளைந்து நெளிந்தோ டிடும்நன்நீ ரோடை
வளைந்த எழில்வான வில்நீ - நெளிந்து
நெளிந்துநீந் தும்மீனும் பார்க்குதடி உன்னை
வளையோசைப் புன்னகை யே

---முறையே கலிவிருத்தம் இன்னிசை நேரிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (17-Aug-21, 9:23 am)
பார்வை : 71

மேலே