கம்பனின் ரசனை
கலிவிருத்தம்
வேதியர் தமைத்தொழுந் வேந்த ரைத்தொழும்
தாதியர் தமைத்தொழுந் தன்னை யேத்தொழும்
ஏதுமொன் றறிகிலா னிருக்கு நிற்குமால்
காதலென் றீதுமோர் கள்ளின் றோத்தலே
14 வருடங்கள் கழித்து தன்னுடைய அண்ணன் நாடு திருப்பிய சந்தோஷத்தில் பரதன்
தான் பேரரசன் என்பதையும் மறந்து தன்னை வணங்க வேண்டியவர்களை பிராமனர்
களையும், சிற்றரசர் களையும் வேலை செய்யும் தாதிமார்களையும் அவன்
வணங்கியதாகவும் . பிறகு அவன் தன்னை மறந்து தன்னையே வணங்கிக் கொண்ட
தாகவும் அவன் செயல் கள்ளுண்டவன் செயலைத் தாண்டி இருந்த தென்று கம்பர்
இந்தப் பாடலைக் கேட்போரும் அந்த குதூகலத்தை நேரில் காண்பதுபோல
சித்தரித்துள்ளதைப் பாருங்கள்