மெழுகாய் உருகியதை

நேரிசை வெண்பா


வேதனையின் குன்றி மெலிதோள்கண் ஊரெழு
பேதமிலா ஆரவாரப் பேச்சதை ---. பேதக்
கொடியர் பெருமைகொளக் கூறுவையோ நெஞ்சே
துடிக்க விடாதுநீயும் சொல்


காதலர் பிரிவு எனதுதோளின் பூரிப்பை சீரழித்து நிற்பதால் ஊரும் அறிந்து
அந்த ஆராவாரம் பேசுகிறது. என்னைப்பார்க்க வராக் கொடியவரிடம் எனது
நெஞ்சே நீ சேன்று இவ்விஷயம் சொல்லி அதனால் நீயும் பெருமை கொள்வா யோ
உடனே அதை எனக்குச் சொல்

குறள்

எழுதியவர் : பழனி ராஜன் (9-Sep-21, 8:36 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 78

மேலே